வினோத் திவாரி எனும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஆர்வலர், ரெம்டெசிவர் ஊசி மருந்துகள் கிடைப்பதில் பெரும் மோசடிகள் நடக்கிறது. செயற்கை பற்றாக்குறை, பதுக்கல், கறுப்பு சந்தைப்படுத்தல் மற்றும் மருந்துப்பொருளை தவறாக பயன்படுத்துதல் காரணமாக இதில் ரூ 25,000 கோடிக்கு மேல் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, இதனை விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மனு அளித்திருந்தார். அது குறித்து திவாரிக்கு பதில் அளித்த மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு, ‘புகாரை ஆணைக்குழு முறையாக ஆராய்ந்து, அதில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளின் தன்மை குறித்து விவாதித்து முகாந்திரம் இருந்தால் விசாரணைக்காக, ரசாயன மற்றும் உர அமைச்சகத்தின் சி.வி.ஓவுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.