தாஜ்மஹாலில், கழிவறை அருகே ராதா கிருஷ்ணர் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சுவாமி மத்ஸ்யேந்திர கோஸ்வாமி மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராதா கிருஷ்ணரின் புகைப்படத்தை அங்கிருந்தும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து இந்திய தொல்லியல்துறை, ராதா கிருஷ்ணரின் புகைப்படத்தை அங்கிருந்து இடமாற்றம் செய்ய முடிவு செய்தது. தாஜ்மஹால் கலரியில் உள்ள படத்தொகுப்பைப் பராமரிக்கும் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.டி.டி.சி) தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்போது ராதா கிருஷ்ணரின் படம் உட்பட அங்கிருந்த முழு படத்தொகுப்பும் கேலரியின் மறுமுனைக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேசமயம் கழிவறையும் கண்ணாடியிழை தகடுகளால் மறைக்கப்பட்டுள்ளது. மேலும், கேலரியில் இருந்து பழமையான மற்றும் தேய்ந்துபோன சுமார் 40 படங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.