இடம் பெயரும் சாம்சங்

சீனாவின் சமீபத்திய போக்கு காரணமாக, சீனாவில் இருந்து தனது பல்வேறு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி ஆலைகளை வேறு நாடுகளுக்கு குறிப்பாக பாரதத்திற்கு இடம் மாற்றி வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் சாம்சங். தற்போது உத்தர பிரதேசம் நொய்டாவிற்கு அதன் ஓ.எல்.இ.டி அலைபேசி திரை உற்பத்தி ஆலையை இடம் மாற்றுகிறது. இது உலகின் மூன்றாவது ஓ.எல்.இ.டி திரைகள் உற்பத்தி தொழிற்சாலையாகும். சாம்சங்கின் தலைமை நிர்வாக அதிகாரி கென் காங், கடந்த ஞாயிற்றுக்கிழமை  அன்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து இது குறித்து பேசினார். கடந்த ஆண்டு டிசம்பர் முதல் உ.பியில் சுமார் 5,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது சாம்சங். இந்நிறுவனம் ஏற்கனவே 2018 முதல் நொய்டாவில் ஒரு மொபைல் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.