ஹிந்துவை கொன்ற மத வெறியர்கள்

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தைத் தொடர்ந்து சுமார் 15 முஸ்லிம் மத வெறியர்களால் ஹிந்து மனிதர் சந்திர மிர்தா கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார் ஒடிசா நாட்காட்டியின்படி, ஹனுமன் ஜெயந்தி கடந்த 14ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சுவாமி ஊர்வலங்களை சிதைப்பதற்காக ஹிந்துக்கள் மீது முன்ஸிம் வன்முறையாளர்கள் பல புதிய வகுப்புவாத மோதல்களை தூண்டினர். கல் வீச்சு, வாகனங்கள், கடைகளுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட பயங்கரவாத சம்பவங்களில் ஆங்காங்கு ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், சன்சிங்காரி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது ஹிந்து நபரான சந்திர மிர்தார் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரும் அவரது நண்பர்களும் சுமார் 15 அடிப்படைவாத முஸ்லிம்களால் தாக்கப்பட்டனர். இதில் நான்கு பேர் காயமடைந்தனர். இதைத்தவிர வெவ்வேறு தாக்குதல்களில், மேலும் மூன்று இளைஞர்களும் காயமடைந்தனர். நகரத்தில் குறைந்தது மூன்று வெவ்வேறு இடங்களில் பத்து கடைகள் எரிக்கப்பட்டன பல கடைகள் சூறையாடப்பட்டன. இதனையடுத்து, வகுப்புவாத பதட்டங்கள் அதிகரித்துள்ளன. சம்பல்பூர் மாவட்டத்தில் இணைய சேவைகளை 48 மணிநேரத்திற்கு நிறுத்திவைத்து ஒடிசா அரசு உத்தரவிட்டது. காவல்துறை துணை ஆணையர் பிரிஜேஷ் குமார் ராய் கூறுகையில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க ஊரடங்கு உத்தரவை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கத்திக்குத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட இருசக்கர வாகன ஊர்வலத்தின் போதுமுஸ்லிம்கள் நடத்திய கல்வீஸ்சு தாக்குதலில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஒரு சில பஜ்ரங் தள் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது 10 பேர் காயமடைந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.