வொயிட் கூட்ஸ் தயாரிப்பில் ரிலையன்ஸ்

பாரதத்தில் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் வொயிட் குட்ஸ் எனப்படும் டி.வி. பிரிட்ஜ், வாஷிங் மெஷின், லைட், ஃபேன் போன்ற பொருட்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இடைவெளியை குறைக்கும் விதமாக, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பாரதத்தில் நீண்ட காலமாக வொயிட் குட்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் பி.பி.எல், கெல்வினேட்டர் ஆகிய இரு முக்கிய பிராண்டுகளைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இவ்விரு பாரத பிராண்டுகளை மீட்டெடுத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையில் இறங்க உள்ளது.