கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு, முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத்துக்கு 3 நாட்கள் தளர்வுகள் அறிவித்தது. அதன் விளைவாக அங்கு பக்ரீத் ஒரு கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டராக மாறியது. பாரதத்திலேயே அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கொண்ட மாநிலமாக அந்த சிறிய மாநிலம் மாறியது. முஸ்லிம்களுக்கு சலுகை வழங்கிய அதே கம்யூனிச அரசு, ஹிந்துக்களின் விழாவான ஓணத்திற்கு எந்த சலுகையும் அளிக்காமல் அதிக கெடுபிடி செய்துவருகிறது. அதனை மறைக்க, ‘இந்த ஆண்டு டிஜிட்டல் முறையில் ஓணம் பண்டிகை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய கலை, கலாசாரம், உணவு, சுற்றுலா தலங்கள் காணொலி காட்சியாக வெளியிடப்படும். டிஜிட்டல் ஓணம் நிகழ்ச்சிகளை ஆகஸ்ட் 14ல் முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக்கிறார். அதில் உலக மலர் கோலம் போட்டி நடத்தப்படும். இதில் பங்கேற்க 10ம் தேதி முதல் பெயரை பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்கும் மலையாளிகள், தங்கள் ஓணம் பூக்கோலத்தை சுற்றுலா துறையின் இணையதளத்தில் பதிவேற்றலாம்’ என்று மழுப்பி வருகிறார் கேரள சுற்றுலாத் துறை அமைச்சரும் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸ்.