அரசுப் பணியில் பயங்கரவாதிகளின் உறவினர்கள்

ஜம்முவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, “சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக ஜம்மு காஷ்மீர் பகுதி பிரிவினைவாதம், ஊழலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அது நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகளை தர மறுத்தது.மேலும், பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தானால் அந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது.பிரதமர் மோடி 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரில் அமைதி, முன்னேற்றம் மூலம் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார்.ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர்.ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விடுகிறது.இங்குள்ள பாகிஸ்தான் அனுதாபிகள் பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை அழிக்க முயல்கின்றனர்.இருப்பினும் தற்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது.குடும்ப அடையாள எண் வழங்கும் நடவடிக்கை குறித்து யாரும் தவறாக எண்ண வேண்டாம்.இது ஜம்மு காஷ்மீரில் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும். அரசுப் பணிகளுக்கென இப்போது நடக்கும் வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவர்கள், முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரின் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் சிலர் உள்ளனர்.முந்தைய காலத்தில் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் எப்படி இந்த அரசுப் பணிகளில் சேர்க்கப்பட்டனர்?பிரிவினைவாதிகளுக்கு எப்படி அரசு வேலை வழங்கப்பட்டது?அரசு பணிகளில் ஆட்தேர்வுகள் கேள்விக்குள்ளானபோது, புலனாய்வு அமைப்புகளால் அது விசாரிக்கப்பட்டது.இதில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியும் தப்பிக்கமுடியாது” என தெரிவித்தார்.