இறப்பு சான்றுக்காக அலைக்கழிக்கப்படும் உறவினர்கள்

கொரோனாவால் உயிரிழப்பவர்கள் பற்றிய தகவலை அரசு மருத்துவமனை நிர்வாகம், மாநகராட்சியின் பெயரிலுள்ள இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்.பிறகு மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திட்டு இறப்பு சான்றிதழை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.இந்த இறப்பு சான்றிதழை மரணமடைந்தவர்களின் உறவினர்கள் டவுன்லோட் செய்து கொள்வார்கள். ஆனால் சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் பற்றிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி இணைய தளங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக முறைப்படி பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் இறப்பு சான்றிதழை பெற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் வாரிசுகள், சொத்து பாகப்பிரிவினை, வங்கி முதலீடு, இன்சூரன்ஸ் பணம் போன்றவற்றுக்கு இறப்புச் சான்றிதழ் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது என்ற நிலையில், தேவையற்ற இந்த தாமதம் இறந்தவர்களின் உறவினர்களை அலைகழித்து மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.