புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதில், ‘பாரத அரசு முன்மொழிந்த நடவடிக்கைகள் எதுவும் வாட்ஸ்அப்பின் செயல்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காது, பயனர்களை பாதிக்காது. தனியுரிமையை அரசு மதிக்கிறது, அதை மீறும் எண்ணம் இல்லை. அதே சமயம், பாரதத்தின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான மிகக் கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்கும், விசாரிப்பதற்கும், தண்டிப்பதற்கும் சாட்சிகள் தேவைப்படும்போது மட்டுமே இத்தகைய தேவைகள் உள்ளன. தனியுரிமை உட்பட எந்தவொரு அடிப்படை உரிமையும் முழுமையானதல்ல. அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சமூக ஊடக நிறுவனங்களில் சட்டரீதியான குறுக்கீட்டை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. பாரதம் கேட்பது மற்ற நாடுகள் கோரியதை விட மிகவும் குறைவுதான்.’ என தெரிவித்துள்ளது.