பஞ்சாப் கோரிக்கை நிராகரிப்பு

மாநிலத்தில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக பஞ்சாப் அரசு, உலகளாவிய டெண்டரை வெளியிடுதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறது.. இந்நிலையில், அமெரிக்க மருந்து நிறுவனமான மாடெர்னாவின் கொரோனா தடுப்பூசியைப் தனது மாநிலத்திற்கு நேரடியாக அனுப்புமாறு பஞ்சாப் அரசு விடுத்த கோரிக்கையை மாடெர்னா நிறுவனம் நிராகரித்துள்ளது. வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா தடுப்பூசிகளை சந்தைப்படுத்தி வரும் மாடெர்னா நிறுவனம், அவர்களின் கொள்கையின்படி, அவர்கள் மத்திய அரசுடன் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளது.