இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐ.எம்.ஏ) என்ற மருத்துவர்களுக்கான தனியார் தொண்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், தனது உயர் பதவியை பயன்படுத்தி சக மருத்துவர்கள், மருத்துவப்பணி ஊழியர்கள், நோயாளிகளை மதமாற்றம் செய்ய தனது பதவியை பயன்படுத்தி வந்தார். இது குறித்து தனது பேட்டிகளிலிலும் அவர் வெளிப்படையாகவே கூறினார். ஏற்றுள்ள பொறுப்புக்கு மாறாக மத பிரசங்கமும் செய்து வந்தார். இதற்கு டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஜெயலால் தனது மதத்தைப் பரப்புவதற்குப் பதிலாக மருத்துவ சகோதரத்துவத்தின் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். அவர் வகிக்கும் பதவியின் கௌரவத்தை பேண வேண்டும். பதவியை துஷ்பிரயோகம் செயுய வேண்டாம்’ என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.