கொரோனவுக்கு எதிரான சீன தடுப்பூசிகளான சினோவாக்கை செலுத்திக்கொண்ட பிறகும் தன் நாட்டு மக்களை மீண்டும் கொரோனா தாக்குகிறது என உணர்ந்த இந்தோனேஷியா, கோஸ்டாரிகா உள்ளிட்ட நாடுகள், சீன தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. மீண்டும் அந்த தடுப்பூசிகளின் செயல் திறனை பரிசோதித்தப் பிறகே கொள்முதல் குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளன. முன்னதாக, சினோவேக் தடுப்பூசிகளை தன் நாட்டு மக்களுக்கு செலுத்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் நாடுகள், அவர்களுக்கு மீண்டும் ஃபைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளை செலுத்தின. சீன விஞ்ஞானி ஜார்ஜ் காவ், சீன தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கவலை தெரிவித்திருந்தார். பின்னர் சீன அரசின் அச்சுறுத்தல் காரணமாக தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என மாற்றிக்கூறினார். உலக சுகாதார மையத்தின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறுவதற்குத் குறைந்தபட்சத் தேவை 50 சதவீதம் என்பதால், சினோவாக் செயல்திறன் 51 சதவீதம் என்று சீனா அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.