திருப்பூரில் உள்ள ஏரகாம்பட்டி கிராமத்தில் நாகேஸ்வரசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 1.50 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை மூன்று பேர் ஆக்கிரமித்திருந்தனர். இதைத்தவிர, இதே கோயிலுக்குச் சொந்தமான ரூ. 78 லட்சம் மதிப்புள்ள 12 ஏக்கர் நிலத்தை 4 பேர் ஆக்கிரமித்திருந்தனர். பொன்னாபுரம் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் 47 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நிலங்களை மீட்டனர். இந்த இடங்களில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.