ராமநவமி ஊர்வலத்தில் மீண்டும் வன்முறை

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில், ஹிந்து பக்தர்கள் மீது மீண்டும் ஒரு திட்டமிட்ட வன்முறை அங்குள்ள முஸ்லிம்கள் மற்றும் திருணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ராம நவமியை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில், பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார். ஊர்வலத்தில் வன்முறையை சமுகவிரோதிகள் அரங்கேற்றினர். ஊர்வலத்தின் இடையே, கல் எறியப்பட்டது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.  பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றார். கலவரக்காரர்களால் ஊர்வலத்தின் மீது கல் எறியப்பட்டது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான பிமன் கோஷ் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வன்முறை சம்பவங்களை அடுத்து, 24 மணி நேரத்திற்கு அந்தப் பகுதியில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பெரிய அளவில் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வன்முறைக்கு காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். குற்றவாளிகள் இரவே ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நிறுத்தப்படுவார்கள் என்று அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார். அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், இந்த வன்முறையின் பின்னணியில் திருணமூல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். “இந்த வன்முறைகளுக்கான காரணம் எளிமையானது, தெளிவானது. மமதா பானர்ஜி ஹிந்துக்களை வெறுக்கிறார்” என்று தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, ராமநவமியை முன்னிட்டு ஹௌரா மாநகரில் கடந்த வியாழன் அன்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதோடு, அங்கிருந்த கடைகளையும் வாகனங்களையும் சூறையாடினர், அவற்றுக்கு தீ வைத்தனர். இக்கலவரத்தில் ஈடுபட்டதாககூறி 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க எம்.பி. லாகெட் சாடர்ஜி கூறுகையில், “மேற்கு வங்கம் ஹௌராவில் ராமநவமியன்று எப்படி வன்முறை நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். வன்முறை நடந்த தினத்தில் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார். முஸ்லிம் மதத்தினர், ஹிந்து மதத்தினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் மமதா ஊடகங்கள் திசைதிருப்பினார். பஞ்சாயத்து தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் முஸ்லிம்களின் வாக்குகள் மீது கவனம் செலுத்துவதால் மமதா பானர்ஜி சமாதான அரசியல் செய்கிறார். ரம்ஜான் ரோஜா மீது மட்டுமே முதல்வர் கவனம் செலுத்துகிறார். அவர் ஹிந்து மத பண்டிகைகளான நவராத்திரி மற்றும் ராமநவமியை கண்டுகொள்வதில்லை. மேற்கு வங்கத்தில் ஹிந்துக்கள் ஆபத்தில் உள்ளனர். பா.ஜ.க எப்போதும் ஹிந்துக்களுக்கு துணை நிற்கும். மேலும் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுப்போம். மேற்கு வங்கத்தின் தற்போதைய சூழ்நிலை பழைய ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் போன்று உள்ளது. மேற்கு வங்க முதல்வர் பதவியில் இருந்து மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.