‘தமிழகத்தில், மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணத்தை நேரிலும், இணையதளம் வழியாகவும் செலுத்த சென்றவர்களிடம், வழக்கமான கட்டணத்துடன் கூடுதல் காப்புத்தொகை (டெபாசிட்) கேட்கப்பட்டுள்ளது. கூடுதல் காப்புத்தொகையை மொத்தமாகவோ, மூன்று தவணைகளிலோ செலுத்த முன்வராத நுகர்வோரிடம், மின்சார கட்டணத்தை அதிகாரிகள் பெற்றுக் கொள்ளவில்லை. கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கால், மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவது, சிறிதும் இரக்கமற்ற செயல். எனவே, கூடுதல் காப்புத் தொகை வசூலிப்பதை, மின் வாரியம் உடனே நிறுத்த வேண்டும்’ என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.