உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறுகையில், “கோயில் கட்டுமான பணி திட்டமிட்ட வேகத்தில் நடந்து வருகிறது. இதுவரை, 40 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்தாண்டு டிசம்பரில் மக்கள் கோயிலில் ஸ்ரீராமரை தரிசனம் செய்யலாம். கோயில் கட்டுமானத்துக்கான நிதியில் எந்தப் பிரச்னையும் இல்லை. மகாலட்சுமி உடன் இருக்கையில், கடவுளுக்கான இந்தப் பணியில் பணம் ஒரு பிரச்னையாக இருக்க முடியுமா? ராமர் கோயில் கட்டுமான பணிகளுடன் சேர்த்து கோயில் வளாகத்தை சுற்றி பல சிறிய கோயில்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கான சாலை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன” என கூறினார்.