கர்நாடகாவின் முல்பாகல் பகுதியில் உள்ள ஆவணி கேஸ்த்ராவில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நான்கு நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஸ்ரீ சீதாராம கல்யாணோத்ஸவம் மற்றும் ஸ்ரீராம மகா சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு இருந்தன. அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு ஸ்ரீராம் ஷோபா யாத்திரை நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் ஸ்ரீனிவாஸ்புரா வட்டத்தை அடைந்ததும், ஊர்வலத்தின் மீது சில மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர். மேலும் அந்த மர்ம கும்பல், ஒரு இருசக்கர வகனத்தையும் தீ வைத்து எரித்தனர். இதனால் ஊர்வலத்தில் பலர் காயமடைந்தனர். குழப்பம் ஏற்பட்டது. கல்வீச்சு தொடங்கிய போது கோலார் தொகுதி பா.ஜக. எம்பி’யான எஸ், முனிசாமியும் ஊர்வலத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 2ம் தேதி ராஜஸ்தானின் கரௌலியில், ஹிந்து புத்தாண்டின் முதல் நாளான நவ் சம்வஸ்தரைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட பைக் பேரணியை முஸ்லிம்கள் தாக்கினர். முஸ்லீம் வன்முறை கும்பல் பேரணி மீது கற்களை வீசியதுடன் பல பைக்குகள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்தது. நான்கு காவலர்கள் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வை மீண்டும் நினைவூட்டியுள்ளது தற்போதைய தாக்குதல்.