அயோத்தி பிரச்சினை கொதிநிலையை எட்டியிருந்த நேரம். நான் 1978ம் ஆண்டிலேயே அகழ்வாராய்ச்சி மாணவராக அயோத்தியில் ஆய்வு நடத்த சென்றுள்ளேன். டில்லியில் உள்ள அகழ்வாராய்ச்சி அமைப்பின் மாணவராக இருந்தேன். எங்கள் குழுவின் தலைவராக பேராசிரியர் பி.பி.லால் இருந்தார். நாங்கள் ஆய்வு நடத்தியபோது அஸ்திவாரப் பகுதியில் செங்கல் கட்டுமானங்கள் இருந்தன. இவை தூண்களை தாங்கியிருந்தன. இந்த தூண்கள் கோயில்கள் சம்பந்தப்பட்டவை. அந்த காலகட்டத்தில் இதை சர்ச்சைக்கு இட
மானதாக யாரும் கருதவில்லை. வரலாற்று கண்ணோட்டத்துடன் அகழாய்வு வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்தியது.
சர்ச்சைக்குரிய கட்டிட சுவர்களின் ஹிந்து கோயில் தூண்கள் காணப்பட்டன. இந்த தூண்கள் பிளாக் பஸால்ட் எனப்படும் கருப்பு நிற கற்களால் ஆனவை. தூணின் அடிப்பகுதியில் பூரண கலசங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. 11-12ம் நூற்றாண்டுகளில் ஆலயக் கட்டிடக் கலை இவ்வாறுதான் இருந்தது. 8 மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். ஒன்று இரண்டல்ல இதைப்போல 14 தூண்கள் அங்கே இருந்தன. 1992ல் தான் இந்த கட்டடம் இடிக்கப்பட்டது.
காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இந்தக் கட்டடம் இருந்தது. உள்ளே யாரையும் அவர்கள் அனுமதிப்பது இல்லை. ஆனால் நாங்கள் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் என்ப
தால் எங்களை அனுமதித்தனர். இதனால் தூண்களை நெருக்கமாக காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் உட்பட 12 மாணவர்களும் இடம்பெற்றிருந்தோம். நாங்கள் அயோத்தியில் 2 மாதங்கள் அகழாய்வு நடத்தினோம். சர்ச்சைக்குரிய கட்டிடத்தை அவரது தளபதி மிர்பாகி எழுப்பியுள்ளார். ஆலய சார்ந்த பொருட்களைக் கொண்டே இந்த மசூதி எழுப்பப்பட்டுள்ளது. ஆலயத்தை மீரே இடித்திருக்கலாம். அல்லது வேறுயாரும் ஆலயத்தை இடித்த பிறகு அதன்மீது மீர், சர்ச்சைக்குரிய கட்டிடத்தை எழுப்பியிருக்கலாம்.
மசூதியின் பக்கவாட்டிலும் பின்பகுதியிலும் செங்கல்லால் ஆன மேடைகள் காணப்பட்டன. இவற்றின் மீதே பிளாக்பஸால்ட் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் அடிப் படையில்தான் நான் 1990ம் ஆண்டு பாபர் மசூதிக்குக் கீழே கோயில் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். அப்போது சூழ்நிலை கொதிக்கத் தொடங்கிவிட்டது. ஹிந்து தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் முரண்பட்ட நிலைகளில் உறுதியாக இருந்தார்கள். இருதரப்பிலுமுள்ள மென்மையாளர்கள் சமரசத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டவர்கள் இதற்கு இணங்கவில்லை.
ராம ஜென்ம பூமி விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. மிதமான போக்குள்ள முஸ்லிம்கள் அயோத்தியை ஹிந்துக்களிடம் ஒப்படைத்துவிடலாம் என்று கூறினார்கள். சில முஸ்லிம் தலைவர்களும் கூட இதே எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல முன்வரவில்லை. இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். கடினமான நிலைப்பாடு கொண்ட முஸ்லிம்களும் இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கிவிட்டனர். எஸ்.கோபால், ரொமிலா தப்பார், பிபந்த் சந்த்ரா உள்ளிட்ட வரலாற்று ஆசிரியர்கள் ராமாயணத்துக்கு வரலாற்று சான்று உள்ளதா என கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். அது மட்டுமல்லாமல் அயோத்தி, புத்த, சமண மையம்தான் என்றும் அவர்கள் பிரகடனப்படுத்திவிட்டனர். இதில் பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மா அக்தார் அலி, டி.என்.ஜா, சுரஜ்பான், இர்ஃபான் ஹபீப் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டவுடன் விவகாரம் விபரீத திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. இக்குழுவினர் பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவில் வல்லுநர்கள் என்ற பெயரில் பங்கேற்றனர்.
சர்ச்சைக்குரிய கட்டிடம் நடவடிக்கைக்குழுவின் கூட்டங்கள் இந்திய வரலாற்று ஆய்வு கூட்டமைப்பின் தலைவர் இர்ஃபான் ஹபீப் தலைமையில் நடைபெற்றுள்ளன. இந்திய வரலாற்று ஆய்வு கூட்டமைப்பின் செயலாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இர்ஃபான் ஹபீப் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்த இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களுக்கு பெரும்பாலான நாளிதழ்கள் வார இதழ்கள் உள்ளிட்ட ஊடகங்களின் ஆதரவு இருந்தது. அயோத்தி விவகாரம் குறித்து அவர்கள் எழுதிய கட்டுரைகள் இந்த ஊடகங்களில் வெளியானதால் குழப்பம் மேலோங்கியது. இதனால்தான் மென்மையான போக்கைக்கொண்டிருந்த பல முஸ்லிம்களும் கூட கடினமான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கிவிட்டனர். இது துரதிருஷ்டவசமானது. ஹிந்துக்களிடம் அயோத்தியை ஒப்படைத்துவிடலாம் என்று கருதிய முஸ்லிம்களும் கூட இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்க தள்ளப்பட்டனர். கம்யூனிஸ்ட் வரலாற்று ஆசிரியர்களால் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டனர். இத்தகைய நிகழ்வு நடைபெறாமல் இருந்திருந்தால் ஹிந்து முஸ்லிம் உறவு சிறப்பானதாக இருந்திருக்கும். இந்தியாவின் வரலாறே விரும்பத்தக்க வகையில் திசை திரும்பியிருக்கும்.
துரதிருஷ்டவசமாக இந்த வாய்ப்பு சிதறடிக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம் வெறித்தனத்துக்கு நிகரானதுதான் கம்யூனிஸ்ட் வெறித்தனம். இது நம் நாட்டுக்கே ஆபத்தானது. நான் 1990ம்ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டேன். இதையடுத்து எனக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பின
ரும் கருத்துக்களை வெளியிடத் தொடங்கிவிட்டனர். நான் எனது அறிக்கையில், மசூதிக்கு கீழே கோயிலின் பாகங்கள் இருந்தன என்பதை கண்ணால் கண்டுள்ளேன் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். அயோத்தியில் சர்ச்சைக்கிடமான கட்டிடம் இடிக்கப்பட்டபோது கல்வெட்டு கிடைத்தது. அது விஷ்ணு ஹரியோடு தொடர்புடையது. சமஸ்கிருதத்தில் நகரி எழுத்து வடிவில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது 11 – 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த ஆலயம் வாலி, ராவணன் ஆகியோரைக் கொன்ற விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்த வாசகம்.
1992ல் டாக்டர் ஒய்.டி. சர்மா, டாக்டர், கே.ஸ்ரீவத்ஸவா ஆகியோர் இந்த களத்தில் ஆய்வு மேற்கொண்டனர். களிமண்ணால் செய்யப்பட்ட விஷ்ணுவின் அவதாரங்கள் சம்பந்தப்பட்ட சிறு சிலைகள் சிவன் – பார்வதி உருவங்கள் ஆகியவற்றை அவர்கள் கண்டெடுத்தனர். இந்த ஆலயம் குஷானா வம்ச காலத்தைச் சேர்ந்தது. (100- – 300) பொது ஆண்டு) 2003ல் மீண்டும் அகழாய்வு நடத்தப்பட்டது. இது அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டதாகும். 50க்கும் மேற்பட்ட செங்கல் கட்டுமான அஸ்திவாரங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை தான் தூண்களைத் தாங்கி நின்றன. கோயி லின் உச்சியில் காணப்படும். இங்கும் இது கண்டெடுக்கப்பட்டது. அபிஷேக நீர் பாய் வதற்கான கலை அமைப்பும் கண்டெடுக்கப்பட்டது. உத்திரப் பிரதேச அகழாய்வு இயக்குநர் டாக்டர் ராகேஷ் திவாரி சமர்ப்பித்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட பகுதியில் கோயில் தொடர்பான 263 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இடிக்கப்படுவதற்கு முன் அங்கு ஹிந்து கோயில் இருந்துள்ளது என்ற முடிவுக்கு அகழாய்வுத் துறை வந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் இதே முடிவுக்குத்தான் வந்தது. இது பாரபட்சமற்றதாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் 131 ஆய்வாளர்களில் 52 பேர் முஸ்லிம்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது. சர்ச்சைக்குரிய கட்டிடம் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த சுராஜ்பான் மொண்டல், சுக்ரியாவர்மா, ஜெயா மேனன் உள்ளிட்ட வரலாற்று ஆசிரியர்களும் இதில் இடம் பெற்றிருந்தனர். உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் பல்டியடித்தார்கள்.
சர்ச்சைக்குரிய கட்டிடம் நடவடிக்கை குழு சார்பில் பங்கேற்றவர்கள் வரலாற்று ஆசிரியர்களே தவிர அகழாய்வாளர்கள் அல்லர். மூன்று அல்லது நான்கு பேருக்கு அகழாய்வு தொடர்பாக ஓரளவு அறிவுண்டு. அவர்களுக்கும் களப்பணி அனுபவம் கிடையாது. எனவே தலைசிறந்த ஆய்வாளரான டாக்டர் பி.ஆர். மணி உள்ளிட்டோர் முன் இந்த இடதுசாரி ஆய்வாளர்கள் குறுகிப் போய்விட்டார்கள். பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த சையத் சகாபுதீன் அப்போதைய மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் இந்திய அகழாய்வு நிறுவனம் பாரபட்சமின்றி செயல்படுகிறது என்பதை அவர் பாராட்டியுள்ளார். இதற்கு உதாரணமாக மத்தியில் பாஜக அரசு இருந்த
போதிலும் ஜவஹர் பிரசாத் என்ற பாஜக எம்.எல்.ஏ. மேற்கொள்ள முன்னெடுத்த விரிவாக்க நடவடிக்கைக்கு இந்திய அகழாய்வு நிறுவனம் தடைவிதித்து விட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கடிதம் இந்திய அகழாய்வு நிறுவனத்தில் தலைமை இயக்குநரால் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதை அடுத்து சையது சஹாபுதீனுக்கு நான் கடிதம் எழுதி அனுப்பினேன். பேராசிரியர் பி.பி.லால் தலைமையில் நடத்தப்பட்ட அகழாய்வில் நான் பங்கேற்றுள்ளேன் என்பதை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். முஸ்லிம் தலைவர்களிடம் இதை தெளிவாக எடுத்துச்சொல்லுங்கள். அடுத்த கூட்டத்திலாவது இதை உறுதிப்படுத்துங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது கருத்தை முஸ்லிம் தீவிரவாதிகள் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால் சையத் சஹாபுதீனின் முயற்சி தோல்வி யடைந்துவிட்டது. இதன்பிறகு நான் அவருடன் விரிவாக விவாதம் நடத்தியுள்ளேன். எனினும் சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க கூடாது என்ற நிலைப் பாட்டிலிருந்து அவர் பின்வாங்க மறுத்துவிட்டார்.
கே.கே.முகமது, தமிழில்: அடவிவணங்கி. நன்றி: ஆர்கனைசர்