டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் ஆசிஃப் என்ற அதிகாரி ஒருவர், விசா வழங்குவதற்காக பாலியல் உதவி கேட்டு பாரதத்தை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். டைம்ஸ் நவ் சேனலின் படி, சீக்கிய பெண்ணான அவர், பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவில் நடக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும், அங்கு ஒரு விரிவுரை வழங்குவதற்காகவும் செல்வதாக இருந்தது. இதற்காக அவர் பாகிஸ்தானிய விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இதனால் தூதரகத்தை விட்டு அவர் வெளியேறும் போது, ஆசிஃப் அவருக்கு உதவுவதாக கூறி ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விசா அதிகாரி வரும் வரை காத்திருக்கச் சொன்னார். பின்னர், ஆசிஃப் அந்த பெண்ணின் கைகளை பிடித்துக்கொண்டு அவருக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். எனது பாலியல் ஆசைகளை நிறைவேற்ற நான் என்ன செய்கிறேன் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அந்த பெண், இதனால் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. என் மதத்தைப் பற்றியும் அவர் என்னிடம் கேட்டார். மேலும், பாரதம் காஷ்மீர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு சமூக இடுகையை எழுதுமாறு என்னிடம் கூறினார். நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன். ஆனால், வேண்டுமென்றே இன்னும் 20 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்டேன். ஆசிஃப் என்னிடம் தொடர்ந்து தனது வக்கிரமான பேச்சுகளைத் தொடர்ந்தார் என கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு அந்த பெண் எழுதிய கடிதத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்து நீதி கேட்டு முறையிட்டுள்ளார். இதனிடையே, இக்குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் சஹ்ரா பலோஸ், “எங்கள் தூதரகங்களுக்கு வருகை தரும் நபர்களிடம் தவறான நடத்தை மற்றும் தவறாக நடத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் இந்த வழக்கை ஆராயும்போது, அதன் நேரம் மற்றும் அது எழுப்பப்பட்ட விதம் குறித்து ஆச்சரியப்படுகிறோம். அனைத்து பொதுமக்களின் குறைகளுக்கும் தீர்வு காண வலுவான வழிமுறைகள் உள்ளன. அனைத்து விசா மற்றும் தூதரக விண்ணப்பதாரர்களிடமும் சரியான நடத்தைக்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார்.