சென்னையின் பல இடங்களில் மழை நீர் வடிகால் வேலைகள் அரையும் குறையுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை என மக்கள் பேசி வருகின்றனர். மேலும், கடந்த மழையில் யார் வீட்டுக்கெல்லாம் மழை நீர் வரவில்லையோ இந்த முறை அவர்கள் வீடுகளுக்குள்ளும் மழை நீர் வரும் என பயந்துகொண்டுள்ளனர் சென்னைவாசிகள். இந்த சூழலில், பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்ககைள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளால் பருவமழையின் போது, சென்னையில் மழைநீர் தேங்காது என நம்புகிறேன். அரசு துறைகளுடன், மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட கூடிய சூழலை உருவாக்க வேண்டும். பேரிடர் காலங்களில் அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களை காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். எப்படியோ, அவரது நம்பிக்கை வீண்போகாமல் இருந்தால் சரி!