இந்திய ரயில்வே, தனது ரயில்களை ஒரு மணி நேரத்திற்கு 160 கி.மீ என்ற வேகத்தில் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வேகத்தில் செல்லும்போது, அதிர்வுகளைக் கட்டுப்படுத்தவும், சுமுகமான பயணம் அமையவும் இணைப்புகள் இல்லாத கான்ட் அவுட் முறையில் தண்டவாலங்கள் அமைப்பது அவசியம். இதற்காக, உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் பிரிவில் உள்ள சஸ்னி ரயில் நிலையத்தில் இதற்கான பூர்வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிர்வுகளைக் கட்டுப்படுத்தவும், சுமுகமான பயணம் அமையவும் இணைப்புகள் இல்லாத ‘கான்ட் அவுட்’ முறையில் தண்டவாளங்கள் அமைப்பது அவசியம். இம்முறையில், டெல்லி கவுஹாத்தி, டெல்லி ஹவுரா, டெல்லி சென்னை, சென்னை மும்பை, சென்னை ஹவுரா, ஹவுரா மும்பை மற்றும் டெல்லி மும்பை ஆகிய ஏழு உயர் அடர்த்தி கொண்ட ரயில் பாதைகள் இதற்காக மாற்றி அமைக்கப்படும். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்வது சாத்தியப்படும். சரக்கு சேவைக்காக பிரத்யேக சரக்கு வழித்தட திட்டமும் ஒருபுறம் வேகமாக நடைபெற்று வருகிறது.