தமிழகம் முழுவதும் மணல் குவாரி, மாஜி அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு

தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். மணல் குவாரி அதிபர்கள், தற்போதைய சில அதிகாரிகள் மற்றும் மாஜி அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. மணல் கொள்ளை தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் திரட்ட இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் ராமச்சந்திரனுக்கு சொந்தமாக இடங்கள் உள்ள அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே அமலாக்க துறையினர் அதிரடி சோதனை சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டையில் தொழிலதிபர் மற்றும் மணல் குவாரி நடத்தி வரும் ராமச்சந்திரன் சொந்தமான உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் ஹனிபா நகரில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் அவர்களின் மைத்துனர் கோவிந்தன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில், மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் மணல் குவாரியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே கந்தனேரி பாலாற்றில் செயல்படும் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூரில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நன்னியூர், புதூர், நெரூரில் உள்ள மணல் குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மணல் குவாரி அதிபர்கள் வீட்டில் மற்றும் அவரது அலுவலங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் பண மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டார். அவர் இப்போது சிறையில் இருக்கிறார். இதற்கிடையே இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது.