காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இஸ்லாமிய மையம் அமெரிக்காவால் நடத்தப்படும் மூன்று நகர அமெரிக்க சுற்றுப்பயணத்திற்காக செவ்வாய்க்கிழமை சான்பிரான்சிஸ்கோ சென்றார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ராகுல் காந்தியின் ‘மொஹோபாத் கி துகான்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காலிஸ்தான் பிரிவினைவதிகள், காலிஸ்தான் கொடிகளை அசைத்து, காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர். இதேபோல, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பாரத சமூகத்தினரிடம் உரையாற்றியபோது, மண்டபத்தில் அமர்ந்திருந்த காலிஸ்தானி பிரிவினைவாதிகள் கலிஸ்தான் பிரிவினைவாத கோஷங்களை எழுப்பினர். காலிஸ்தான் கொடிகளை காற்றில் அசைத்து ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்களை எழுப்பினர். வெளியான அறிக்கைகளின்படி, அவர்கள் மக்கள் நீதிக்கான சீக்கியர் (எஸ்.எஃப்.ஜே) என்ற தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பியபோது, அந்த பிரிவினைவாதிகளை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக ராகுல் காந்தி அவர்களை நோக்கி சிரித்து பிரிவினைவதிகள் மீதான காங்கிரசின் அன்பை வெளிப்படுத்தினார். இது அங்குள்ளவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அவரது இந்த எதிர்வினை அங்கிருந்த கேமராக்களில் பதிவாவதை உணர்ந்த ராகுல், திடீரென்று புன்னகையை நிறுத்திவிட்டு, ‘நஃப்ரத் கே பஜார் மே, மொஹபத் கி துகான்’ (வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை) என்று பதிலளித்தார். ராகுலின் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்பப்படுவது இது முதல் முறை அல்ல, 2018ம் ஆண்டும் லண்டனில் ராகுல் காந்தியின் நிகழ்ச்சியிலும் காலிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்பப்பட்டன, கலிஸ்தான் கொடிகள் உயர்த்தப்பட்டன. இந்நிலையில், காலிஸ்தான் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மறைமுகமான ஆதரவு மற்றும் அவர்களது விஷயத்தில் மௌனம் காப்பதற்குக் காரணம், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அவரது குடும்பத்தினரும் அக்கட்சியும் பின்பற்றி வரும் ‘பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலே’ மூல காரணம் என்று மக்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.