வங்க தேசத்தில் நடைபெறும் ஹிந்துக்கள் மீதான முஸ்லிம்களின் வன்முறைகளை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் திரிபுராவில் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது, திரிபுராவின் பனிசாகரில் உள்ள மசூதி ஒன்று ஹிந்துக்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக முஸ்லிம்கள் பொய் செய்திகளையும் போலி புகைப்படங்களையும் பரப்பினர். அங்கு மசூதி தாக்கப்படவில்லை. மாறாக, பேரணி மீது மசூதியில் இருந்த முஸ்லிம்கள் தான் தாக்குதல் நடத்தினர். இதனை, திரிபுரா காவல்துறையும் உறுதிபடுத்தி உள்ளது. இந்நிலையில், திரிபுரா சம்பவம் குறித்து பொய்யான செய்திகளை ராகுல் காந்தி பரப்பி வருகிறார். இதனை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், திரிபுரா விவகாரம் குறித்து பொய்யான செய்திகளை பரப்புவதை ராகுல் நிறுத்த வேண்டும் வகுப்புவாத மோதல்களை தூண்டும் விதமாக பேசி ‘நெருப்புடன் விளையாடகூடாது என்று எச்சரித்தார். மேலும், ‘இது முஸ்லிம்களின் மிகப் பழைய தந்திரம். அவர்கள் முதலில் வன்முறையில் ஈடுபடுவார்கள், ஆனால், பிறகு தாங்கள் பாதிக்கப்பட்டதாக நாடகம் ஆடுவார்கள்’ என தெரிவித்தார்.