வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த திங்கட்கிழமை அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றம் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லிக்குள் பாதுகாப்பை மீறி அந்த டிராக்டர் எப்படி கொண்டுவரப்பட்டது என்பது விசாரணைப் பொருளானது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில், டிராக்டர் ஒரு கண்டெய்னர் லாரியில் மறைத்து கொண்டு வந்துள்ளனர். காவல்துறை அந்த லாரியை வழயில் மடக்கி விசாரித்தபோது, ஒரு காங்கிரஸ் தலைவரின் கடிதம் காவலர்களிடம் கொடுக்கப்பட்டது. அதில், கண்டெய்னரில் நாடாளுமன்ற அலுவல் சம்பந்தப்பட்ட முக்கிய பொருட்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து லாரியை சோதனை செய்யாமல் காவலர்கள் அனுப்பிவிட்டனர். பின்னர் நாடாளுமன்றத்தின் அருகில் உள்ள காங்கிரசை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் கே.டி.எஸ் துளசியின் அலுவலகத்தில் டிராக்டர் ரகசியமாக பதுக்கிவைக்கப்பட்டது. போராட்டத்திற்கு வசதியாக சில மாற்றங்கள் டிராக்டரில் அங்கேயே செய்யப்பட்டது என்பது தெரியவந்துல்ளது. நாட்டின் பெரிய எதிர்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, சட்டத்தையும் காவல்துறையையும் ஏமாற்றியுள்ளார். தடைசட்டம் 144ஐ மீறி நாடாளுமன்றத்தில் டிராக்டரை ஓட்டிவந்தார் என்பதும் இதனால் தெளிவாகியுள்ளது. இவர் எல்லாம் எப்படி நாட்டை காப்பாற்றுவார் என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.