வரலாறு தெரியாத ராகுல்

‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்துதான் பாரதம் உருவானது என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பாரதம் உருவான பின் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார். இதனை கண்டித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி, ‘ராகுலுக்கு வரலாறும் தெரியாது; சட்டமும் தெரியாது. அவர் எதையும் படிக்க மாட்டார்; படித்தவர் கூறினாலும் கேட்க மாட்டார். சிறுபிள்ளைத்தனமாக நாடாளுமன்றத்தில் உளறியுள்ளார். பாரதம் உருவான பின்னணி அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என அவருக்கு சொல்லி கொடுக்கப்படும். நமது அரசியல் சட்டத்தை படித்து உணர்ந்தவர்கள் பாரதத்தை மாநிலங்களின் கூட்டமைப்பு என்று கூற வாய்ப்பில்லை. அரசியல் சட்டத்தில் கூறப்படாத ஒரு விஷயத்தை ராகுல் பேசுவது பிரிவினைவாதம். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என பேசி வருகின்றனர். இது தற்போது நாடாளுமன்த்துக்கும் வந்துள்ளது. ராகுலின் பிரிவினைவாத பேச்சை முதல்வர் ஸ்டாலின் பாராட்டுவதும் காங்கிரஸ் நன்றி சொல்வதும் வேடிக்கை. இப்படிப்பட்ட பிரிவினைவாதத்தால் தான் கருணாநிதியின் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. இதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என தெரிந்தும் அதனை தி.மு.க விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளது. இப்போது அது ராகுல் வாயிலாக நாடாளுமன்றம் வரை வந்துள்ளது. இதில் காங்கிஸ். இரட்டை வேடம் போடுவது வெட்டவெளிச்சமாகி விட்டது. இவற்றை அனுமதிக்க கூடாது’ என தெரிவித்துள்ளார்.