தேச துரோக நிகழச்சிகளை நடத்தும் ராகுல்காந்தி

ஒடிசா ரயில் விபத்து குறித்து நாடே துயரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி தேசத் துரோக நிகழ்ச்சிகளை நடத்துவது வேதனை அளிக்கிறது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்து பேசுகையில் “ரயில் விபத்து ஏன் ஏற்பட்டது என்று கேட்டால் 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் செய்த தவறுகள்தான்” என்று பாஜக கூறும் என்றார்.

இந்நிலையில் ராகுலின் பேச்சு தொடர்பாக ஜம்முவில் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் பேசியதாவது :

மத்திய அரசு ரயில் விபத்து நிகழ்ந்தது முதல் அயராது பணியாற்றி வருகிறுது. விபத்து நடந்த 51 மணி நேரத்தில் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த பகுதிக்கு பிரதமர் மற்றும் 3 மத்திய அமைச்சர்களும் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. தேசம் விபத்தில் பறிபோன ஒவ்வொரு உயிருக்கும் துக்கம் அனுசரிக்கிறது. இதுபோன்ற உண்மை நிலவரத்தை அறியாமல் சிலர் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஒடிசா ரயில் விபத்தால் நாடே துயரமடைந்துள்ளது. இந்தச் சூழலில் ராகுல் காந்தி தேச விரோத நிகழ்ச்சிகளை நடத்துவது மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதும் வேதனை அளிக்கிறது. ஒருவருக்கு ஒருவர் துணை நின்று, வேற்றுமைகளை ஒதுக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒற்றுமையாக பணியாற்ற வேண்டிய நேரம் என்று ஹர்தீப் சிங் புரி கூறினார்.