ராகுல் கேள்விக்கு பதிலடி

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பான காங்கிரஸ், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி நாடாளுமன்றத்தில் பேசிய பழைய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும், “யாராவது இந்த வீடியோ பேச்சை ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்களுக்கு காட்ட முடியுமா?சுதந்திரத்திற்கு பின்னர் எல்லைப் பகுதியில் வளர்ச்சி பணிகளைச் செய்யாமல் இருந்ததே காங்கிரஸ் கட்சியின் கொள்கை.ஏனெனில், அதுதான் சிறந்த பாதுகாப்பு கொள்கை என அவர்கள் நம்பினர்” என்றும் தெரிவித்துள்ளார். கிரண் ரிஜிஜு பகிரந்துள்ள வீடியோவில், ஏ.கே அந்தோணி, “சுதந்திரத்திற்கு பின்னர் நீண்ட ஆண்டுகளாக எல்லை பகுதியில் சிறந்த பாதுகாப்புக்கான வளர்ச்சி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஏனெனில், வளர்ச்சி பணிகள் இல்லாத எல்லைப் பகுதியே சிறந்த பாதுகாப்பு.எனவே நீண்ட ஆண்டுகளாக எல்லைப் பகுதியில், சாலை வசதி, விமான தளங்கள் போன்றவை ஏற்படுத்தப்படவில்லை.ஆனால், அந்த நேரத்தில் சீனா எல்லைப் பகுதியில் தன்னுடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளைத் தொடர்ந்தது.அதனால் அவர்கள் நம்மை விட முன்னேறி உள்ளனர்.எல்லலைப் பகுதியில் உள்கட்டமைப்பு ரீதியாக, திறன் அடிப்படையில் அவர்கள் நம்மை விட ஒரு படி முன்னாலேயே இருக்கின்றனர்.இதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.இதுதான் கடந்தகால வரலாறு” என்று பேசியுள்ளார்.