பாரதம், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா நோய்க்கு எதிராக போராடுவது, கூட்டாண்மை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இந்தோ பசிபிக் பிராந்தியம் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் சட்ட ஆதிக்கம், கடல் வழி, விமான வழி போக்குவரத்துக்கான சுதந்திரம், சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு, கொரோனா தடுப்பூசிகளின் ஏற்றுமதியை மீண்டும் பாரதம் தொடங்குவதற்கான வரவேற்பு, புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் தயாரிப்பு, விநியோகச் சங்கிலியை மேம்படுத்துதல், சைபர் ஸ்பேஸில் ஒத்துழைப்பு என பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.