கிராமங்களில் தூய்மை இயக்கம்

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேசமெங்கும் தூய்மை இந்தியா இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் உள்ள 8,393 கிராமங்களில் 1,10,424 இளம் தன்னார்வலர்கள் தூய்மை இயக்கத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள், வணிக சமூகங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், விளையாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து நடைபெற்று வரும் தூய்மை இந்தியா செயல்பாடுகளை, மக்கள் இயக்கமாக மாற்றுவதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம். இதைத் தவிர, இதுவரை, 459 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன, 254 நீர் ஆதாரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, 1,820 பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், இதர பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரம் கடற்கரை, பாரம்பரிய சுற்றுலாத் தளங்களிலும் தூய்மை இந்தியா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாட்டு நலப்பணி திட்டம், எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி, நேரு யுவ கேந்திரா இளைஞர் பிரிவை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தன்னார்வலர்கள் இதில் இணைந்து 42 கிலோ கழிவுகளை அப்புறப்படுத்தினர்.