பா.ஜ.கவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “காங்கிரஸ் கட்சியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராகி இருப்பது பாராட்டுக்குரியது. கட்சியின் அதிகாரம் முழுவதும் சோனியா கையில் இருப்பதால், புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஒரு பொம்மை தலைவராகவே செயல்படுவார். நிழல் தலைவராக சோனியாவே இருந்து கட்சியை நடத்துவார். முன்பு எப்படி மன்மோகன் சிங்கை பிரதமராக்கி சோனியா நிழல் பிரதமராக இருந்தாரோ, அப்படியே இப்போது கட்சியிலும் இருப்பார். காங்கிரசை பொறுத்தவரை தலைவர் மாறினாலும், அதிகாரம் நேரு குடும்பத்தாரிடம் தான் இருக்கும். பாரதத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் இருண்டு விட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்திக்க போகிறது என முன்கூட்டியே தெரிந்து விட்டதால், சோனியாவும், ராகுலும் தலைவர் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. மேலும், இந்த கட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என, எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் தேர்தல் பொறுப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்” என கூறினார்.