இங்கிலாந்து தலை நகர் லண்டனில் உள்ள சர்வதேச பணமோசடி மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்ட மேற்கு லண்டனை தளமாகக் கொண்டு செயல்பட்ட ஒரு குற்றக் குழு குறித்த முக்கிய விசாரணையைத் தொடர்ந்து, பாரத வம்சாவளியைச் சேர்ந்த இந்த அமைப்பின் தலைவரான சரண் சிங், வல்ஜீத் சிங், ஜஸ்பீர் சிங் கபூர், ஜஸ்பீர் சிங் தால் உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 16 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017 மற்றும் 2019க்கு இடையில் துபாய்க்கு நூற்றுக்கணக்கான பயணங்களை மேற்கொண்ட இந்த குற்றவியல் வலையமைப்பின் உறுப்பினர்கள் 42 மில்லியனுக்கும் அதிகமான பௌண்டுகள் பணத்தை இங்கிலாந்துக்கு வெளியே கடத்திச் சென்றுள்ளனர். இது அவர்களால், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் குடியேற்றக் குற்றங்களின் மூலம் லாபம் ஈட்டப்பட்ட பணம் என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். விமான பகுப்பாய்வு, துபாயில் வெளியிடப்பட்ட பண அறிவிப்புகள் மற்றும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்ட பிற பொருட்கள் ஆகியவற்றைத் தவிர, இங்கிலாந்தில் இருந்து கூரியர்களிடமிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 1.5 மில்லியன் பௌண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தேசிய குற்றவியல் நிறுவனம் கூறியுள்ளது.