ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநில அரசு, அரசு ஊழியர்கள், பாரதத்தின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றானஹெச்.டி.எப்.சி வங்கியில் சம்பள கணக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஏற்கனவே வைத்து இருந்தால் அந்த கணக்கை மூடிவிட வேண்டும் என்றும் உத்தரவு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் அரசு எச்டிஎஃப்சி வங்கி மீது இந்த அளவு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது பஞ்சாப் நீர்வளத்துறைக்கு எச்.டி.எஃப்.சி வங்கி ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மாநில நீர்வளத்துறையின் சுரங்க ஒப்பந்ததாரர்களுக்கு சில உத்தரவாதங்களை வழங்கியதாகவும், ஆனால் அந்த உத்தரவாதங்களை எச்டிஎஃப்சி வங்கி பின்பற்றவில்லை என்றும், அதனால் தான் இந்த நடவடிக்கை என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எச்டிஎஃப்சி விளக்கம் “எச்.டி.எஃப்.சி வங்கி இது குறித்து விளக்கமளித்தபோது, ‘வங்கி உத்தரவாதங்களின் விதிமுறைகளின்படி, அதன் அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். சுரங்க ஒப்பந்ததாரர்கள் சார்பாக வழங்கப்படும் வங்கி உத்தரவாதங்கள் தொடர்பான விஷயத்திலும் வங்கி எல்லா நேரங்களிலும் அதன் அனைத்து கடமைகளையும் உடனடியாக நிறைவேற்றியுள்ளது’ என்றும் கூறியுள்ளது.