ஐயப்பமாலை மாணவனுக்கு தண்டனை

தெலுங்கானாவை சேர்ந்த செயின்ட் மேரிஸ் பள்ளி நிர்வாகம், அதில் பயிலும் கிஷோர் என்ற 10ம் வகுப்பு பயிலும் மாணவன், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக விரதம் கடைப்பிடித்த காரணத்தால் அவனை தண்டித்துள்ளது. அவனை ஒரு மணி நேரம் கடும் வெய்யிலில் நிற்கவைத்தது. பலமுறை கேட்டுக்கொண்டும் வகுப்பறையில் அனுமதிக்க மறுத்தது. இக்செய்தியை அறிந்த சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (எல்.ஆர்.பி.எப்) அமைப்பினர், மாணவர் மற்றும் அவனது பெற்றோரை அணுகி விவரங்களை சேகரித்தனர். அப்போது, பள்ளியில் பயிலும் ஹிந்து மைனர் குழந்தைகள் மீது கிறிஸ்தவ மதக் கருத்துக்களை பள்ளி நிர்வாகம் திணிக்கிறது, தினமும் காலையில் கிறிஸ்தவ மதப் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதைக் கட்டாயமாக்குகிறது என கிஷோர் தெரிவித்தான். இதனையடுத்து எல்.ஆர்.பி.எப் அமைப்பு, தேசிய குழந்தைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. தமிழகம் உட்பட பாரதமெங்கும் பல பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், இதற்கெதிராக மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.