இலவச அரிசி திட்டம், ரேஷன் கடைகளைத் திறந்து அதன் மூலம் அரிசி விநியோகம், ஊரக வளர்ச்சி திட்டங்கள், சிறுபான்மை மக்களுக்குத் தேவையான திட்டங்கள் செயல்படுத்துவது, அத்துறைக்கென்று தனியாக ஐ.ஏஎ.ஸ் அதிகாரி நியமனம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதல், தேவையான நிதி ஒதுக்குதல் என்பது போன்ற கோரிக்கைகளுக்காக, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் சரவணகுமார், சபாநாயகர், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து ஒப்புதல் பெற அடுத்த வாரம் பயணப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.