வெளியான டெல்லி ஆக்ஸிஜன் அரசியல்

தீவிர கொரோனா நோயாளிகளுக்கு அத்தியாவத் தேவையான ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு ஆக்ஸிஜன் தயாரிப்பு அமைப்புகளை நிறுவுதல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை என புலம்பிய மாநில அரசுகளில் முக்கியமானது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு. ஆனால், தற்போது வெளியான ஆக்ஸிஜன் தணிக்கை அமைப்பின் அறிக்கையில், கெஜ்ரிவால் இதில் அரசியல் செய்த்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தணிக்கை அமைப்பு:

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது, மத்திய அரசு உண்மையான ஆக்ஸிஜன் தேவை எவ்வளவு, கையிருப்பு, உற்பத்தி, செலவழிப்பு உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய ஒரு தணிக்கைக்குழுவை அமைத்தது.

அறிக்கைத் தாக்கல்:

ஆக்ஸிஜன் தணிக்கை அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கொரோனா இரண்டாவது அலையின் உச்சக்கட்டமான ஏப்ரல் 25 முதல் மே 10 வரையிலான காலகட்டத்தில், டெல்லியின் ஆக்ஸிஜன் தேவையை நான்கு மடங்காக மிகைப்படுத்தி டெல்லி அரசு கூறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு தேவையே இல்லாமல் அதிகப்படியான ஆக்ஸிஜன் வழங்குவது, ஆக்ஸிஜன் அதிகமாகத் தேவைப்படும் 12 மாநிலங்களுக்கான வழங்கலை பாதித்திருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

உண்மைத் தேவை:

ஆக்ஸிஜன் வசதிப் படுக்கைகள், நோயாளிகளின் எண்ணிக்கை என்ற கணக்கீட்டு அளவின்படி டெல்லிக்கு ஒரு நாள் தேவை 289 மெட்ரிக் டன் மட்டுமே. ஆனால், 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என்று டெல்லி அரசு பொய்யாக கூறியது. பெட்ரோலிய மற்றும் ஆக்ஸிஜன் பாதுகாப்பு அமைப்பு கூட டெல்லியில் தேவைக்கும் அதிகமாக ஆக்ஸிஜன் இருப்பதாகய்த் தெரிவித்திருந்தது.

நீதிமன்றம் தலையீடு:

ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து ஆம் ஆத்மி அரசு போலி எச்சரிக்கை எழுப்பியதை அடுத்து அதன் வேண்டுகோளின்படி, 700 மெட்ரிக் டன் விநியோகிக்கவும் அந்த அளவை சரியாக பராமரிக்கவும் மத்திய அரசுக்கு கடந்த மே 5 அன்று நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.

கோரிக்கையை நிராகரித்த கெஜ்ரிவால்:

ஆக்ஸிஜன் அதிகமாகக் கோரப்படுகிறது என அறிந்த மத்திய அரசு கெஜ்ரிவாலிடம் அதனை தணிக்கை செய்ய பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதனை நிராகரித்தது. பின்னர் நீதிமன்ற ஆணையை அடுத்து தணிக்கைக்கு ஒப்புக்கொணடது.

ஆக்ஸிஜன் பதுக்கல்:

அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இம்ரான் ஹுசேன் உட்பட பலர் டெல்லியில் ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அதனை அதிக விலைக்கு கருப்பு சந்தையில் விற்று பிடிபட்டனர். மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆக்ஸிஜன் செயற்கை பற்றாக்குறை உருவாக்கப்பட்டது.

பராமரிப்பின்மை:

டெல்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் அளவுகளை முறையாக பராமரிப்பதில்லை, வீணாக்கப்படுகிறது, தேவைக்கு அதிகமாக நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது என தணிக்கையில் தெரியவந்தது.

ஊடகங்கள் பங்கு:

டெல்லியில் அவசரகால ஆக்ஸிஜன் விநியோகத்தையும் மக்களையும் குழப்பும் விதமாக தொடர்ந்து அவநம்பிக்கையான செய்திகளை ஊடகங்கள் பரப்பின. குறிப்பாக பி.பி.சி உட்பட சில மேற்கத்திய ஊடகங்கள் இதில் அதிக தீவிரம் காட்டின.

அமைச்சர் கண்டனம்:

தணிக்கை அறிக்கையை சுட்டிக்காட்டிய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இதுபோன்ற ஒரு மோசமான தவறுக்கு டெல்லி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியிருந்தார்.

தொடரும் பதுக்கல்:

டெல்லி பா.ஜ.க பிரிவு கடந்த ஜூன் 22 அன்று தனது டுவிட்டர் பதிவில், ‘டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில், கைவசம் போதுமான தடுப்பூசிகள் இருந்தபோதிலும், அதனை மக்களுக்கு அளிகாமல் பதுக்குகிறது. ஆக்ஸிஜனைப் போலவே செயற்கை பற்றாக்குறையை உருவாக்க முயல்கிறது’ என குற்றம்சாட்டியது.

இது, மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில், வேண்டும் என்றே ஆக்ஸிஜன் அரசியல் செய்து மக்கள் உயிருடன் விளையாடிய அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்ததாக தடுப்பூசியை வைத்து தனது அரசியல் விளையாட்டை தொடர்கிறார் என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

மதிமுகன்