மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை வரும் ஜூன் 21 அன்று அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கப்படும். தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் சரியான விலையில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்’ என மத்திய அரசு மா நில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.