கோவாக்சின் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்

பாரதத்தில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் உலகிலேயே மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.இதுவரை 22 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதனால், தடுப்பூசி தயாரிப்புகளை மேலும் வேகப்படுத்தி இலக்கை விரைவாக எட்ட மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ் லிமிடெட் (ஐ.ஐ.எல்) மற்றும் பாரத் இம்யூனாலஜிக்கல்ஸ் அண்ட் பயாலஜிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிப்கால்) ஆகிய இரண்டு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும், மஹாராஷ்டிர அரசின் பொதுத்துறை நிறுவனமான, ‘ஹாப்கைன் பயோ பார்மசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்துக்கும் அதற்கான தொழில்நுட்ப சாதனங்கள், நிதி உதவிகளை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த நிறுவனனள் வரும் செப்டம்பர் முதல் நவம்பருக்குள் முழு அளவிலான உற்பத்தியை துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.