பா.ஜ.க எம்பி நிஷிகாந்த் துபே எழுப்பிய பொது சிவில் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘இந்த விவகாரம் அதன் முக்கியத்துவம், உணர்திறன், பல்வேறு சமூகங்களை நிர்வகிக்கும் பல்வேறு தனிநபர் சட்டங்களின் விதிகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுள்ளது. சட்ட ஆணையம், ஒரே மாதிரியான சிவில் சட்டம் தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்கான முன்மொழிவை 21வது சட்ட ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. எனினும், அதன் பதவிக்காலம் முடிவடைந்ததால், இது 22வது சட்ட ஆணையத்தால் எடுத்துக்கொள்ளப்படலாம். அரசியலமைப்பின் 44வது பிரிவு, பாரதம் முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளது’ என்றார்.