தவறான செய்திகளைப் பரப்பும் பி.டி.ஐ

லட்சத்தீவுகளின் நீதிமன்ற அதிகார வரம்பை கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு மாற்ற லட்சத்தீவு நிர்வாகம் முடிவெடுத்து உள்ளதாக பி.டி.ஐ தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது. ஆனால், அப்படி மாற்றும் எண்ணம் ஏதும் இல்லை என லட்சத்தீவு நிர்வாகம் மறுத்துள்ளது.

பி.டி.ஐயின் போலி செய்திகள்:

செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பி.டி.ஐ) பலமுறை தவறான செய்திகளை பரப்பிய வரலாற்றைக் கொண்டுள்ளது. உதாரணமாக, கடந்த ஏப்ரல் மாதம், டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 25 பேர் இறந்ததாக பி.டி.ஐ தெரிவித்திருந்தது. ஆனால்,. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த மரணமும் நிகழவில்லை என்று மருத்துவமனை தெளிவுபடுத்தியது. கடந்த 2020 ஆகஸ்டில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து பிரதமர் மோடியின் பேச்சை, தவறாக செய்திப்படுத்தியது பி.டி.ஐ. பிரதமர் மோடி குறித்து பொய் பிரச்சாரம் செய்ய இந்த ட்வீட்டை காங்கிரஸ் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அது பொய் என நிரூபிக்கப்பட்டப் பிறகு அதனை நீக்கியது காங்கிரஸ். அதேபோல, கடந்த அக்டோபர் 2020ல், சீனா தங்கள் நாடு குறித்து சுய பிரச்சாரம் செய்துகொள்ள ஏதுவாக தங்கள் செய்தி நிறுவனத்தை பயன்படுத்த பி.டி.ஐ அனுமதித்தது. இதனை அடுத்து பிரசார் பாரதி, பி.டி.ஐ உடனான தனது செய்திப் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.