பி.எஸ்.எப் பாரதத்துக்கு பெருமை

பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையின் 18வது துவக்க விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா, ‘உலக வரைபடத்தில் பாரதத்தின் இருப்பிற்கு காரனமான பி.எஸ்.எப், துணை ராணுவப் படைகள் காரணமாக பாரதம் பெருமை கொள்கிறது. இவர்களால், உலக வரைபடத்தில் பாரதம் தனது நிலையை வலுப்படுத்துகிறது. இந்த துணிச்சலான இதயங்களையும் வீரர்களையும் மறக்க முடியாது. முந்தைய கிழக்கு பாகிஸ்தானில், மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் அவர்களைக் காக்க, பிஎஸ்எப் துருப்புக்கள் முக்கிய பங்காற்றின. அவர்களால் இப்போது, ​​வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக உள்ளது’ என கூறினார். இவ்விழாவில் வீரதீரச் செயல் புரிந்த 27 பி.எஸ்.எப் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.