உத்தரபிரதேசத்தில், கல்வி, சமூகம், மத நிறுவனங்களின் போர்வையில் ஏழைகள், மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றி, மிரட்டி, பயமுறித்தி சட்டவிரோத மதமாற்றங்களில் ஈடுபட்ட முசாபர்நகரைச் சேர்ந்த மௌலானா கலீம் சித்திக்கின் இரண்டு கூட்டாளிகளை உத்திரபிரதேச பயங்கரவாத எதிர்ப்பு குழு (ஏ.டி.எஸ்) கைது செய்தது. ஃபுலாட் கிராமத்தில் வசிக்கும் முகமது இத்ரீஸ் குரேஷி, முகமது சலீம் ஆகியோர் கடந்த 17 ஆண்டுகளாக சித்திக்குடன் தொடர்புடையவர்கள். இவருடன் சேர்ந்து இந்த மதமாற்ற மோசடியிலும் அவர்கள் ஈடுபட்டனர். மேலும், நாசிக் ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்த குணால் சவுத்ரி என்ற ஹிந்து பெயருடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட அடிஃப் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தை விசாரிக்க உத்தரபிரதேச ஏ.டி.எஸ் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.