ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் திரிபாதி உத்தரபிரதேச காதி கிராமத் தொழில்துறை வாரியத்துடன் இணைந்து ஒரு முன்முயற்சியாக ‘புராஜக்ட் ராம் லல்லா’ எனும் திட்டத்தை துவங்கியுள்ளார். இத்திட்டம் திரிபாதியின் ‘நகரத்தில் இருந்து கிராமம் வரை’ எனும் முயற்சியின் ஒரு பகுதி. திறமையான தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்கு தேவையான பயிற்சியளித்து அவர்கள் சுயமாக வாழவைப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதில் ஈடுபட்டுள்ள பெண் கைவினைஞர்கள் அயோத்தியில் உள்ள குழந்தை ராமருக்கு (ராம் லல்லா) தேவையான ஆடைகளை உருவாக்கியுள்ளனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சார்பாக, வசந்த பஞ்சமியில் வெவ்வேறு வண்ணங்களின் 7 ஆடைகள் பகவான் ராம் லல்லாவுக்கு வழங்கப்பட்டன.