பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ அஸ்லம் சவுத்ரி, உத்தரகாண்டில் உள்ள ஒரு கோயிலுக்குள் நுழைவதாக மிரட்டியதோடு, கோயில் தனது மூதாதையருக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன், காஜியாபாத்தில் உள்ள தஸ்னா கோயிலில், ஒரு முஸ்லீம் சிறுவன் கோயிலில் அத்துமீறி நுழைந்துள்ளான். ஹிந்து பெண்களை துன்புறுத்துவதற்காகவும் திருடுவதற்காகவும் சில முஸ்லிம்கள் கோயிலுக்குள் நுழைவதாக, தஸ்னா கோயிலின் தலைமை பூசாரியான யதி நரசிங்கானந்தும் பல உள்ளூர் ஹிந்துக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், உத்தரகண்டில் சுமார் 150 கோயில்களில் ‘ஹிந்து அல்லாதவர்களுக்கு கோயிலில் அனுமதி இல்லை’ என்ற பதாகைகளை ‘ஹிந்து யுவ வாகினி’ என்ற அமைப்பு வைத்தது. உத்தரகாண்ட் காவல்துறையினர் இந்த பதாகைகளை அகற்றியதுடன் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.