பாலஸ்தீன சார்புப் பேரணிகளுக்குத் தடை

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து உலகின் பல இடங்களில் முஸிலிம்கள் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள், ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போன்ற பேரணிகளை தங்கள் நாட்டில் நடத்த முற்றிலுமாக தடை விதித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. தாக்குதல்களுக்கு மத்தியில் பாரிஸில் அனைத்து பாலஸ்தீன சார்பு பேரணிகளையும் தடை செய்ய பிரான்ஸ் உத்தரவிட்டது. ‘முன்னதாக கடந்த 2014ல் பாரிஸில் நடைபெற்ற இதேபோன்றதொரு பாலஸ்தீன ஆதரவு போராட்டம் அங்கு பெரும் வன்முறையாக மாறியது. அதைபோன்றதொரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் கூறியுள்ளார்.