அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வாஸ் ஷர்மா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து கூறுகையில், ‘முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஆண்களும்கூட ஹிந்து பெண்களை ஏமாற்றுவது தவறுதான். எனவே வேறு எந்த காரணங்களுக்காகவும் முஸ்லிம், கிறிஸ்தவர், ஹிந்து இளைஞர்கள், பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால்கூட இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். மேலும், முஸ்லிம்களை மட்டுமே சுட்டிக்காட்டுவதாக உள்ள ‘லவ் ஜிஹாத்’ என்கிற வார்த்தையை இந்த சட்டத்தில் தங்கள் அரசு பயன்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.