தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் தொன்மைவாய்ந்த பல கோயில்களையும் மக்கள் அதிகம் செல்லும் கோயில்களையும் தொடர்ந்து இடித்து வருகிறது. சில கோயில்களை புதுப்பிக்கும் நோக்கில் இடித்ததாக ஹிந்து சமய அறநிலையத்துறை காரணம் கூறுகிறது. பல கோயில்கள் அரசு நிலத்திலும், நீர்நிலைகளின் அருகாமையிலும், ஆக்கிரமிப்பு நிலத்திலும் கட்டப்பட்டதாகக்கூறி அரசு திடெரென இடித்துத் தள்ளியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்கள் என வகைப்படுத்தப்படும் கோயில்களை முன்னறிவிப்பின்றி இடிக்க தடை விதிக்க வேண்டும். அவ்வாறு உள்ள கோவில்களை முறைப்படுத்தவும், இடமாற்றம் செய்யவும் சரியான செயல்திட்டத்தை அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.