முகநூல் நிறுவனம் தனது வாட்ஸப் தகவல் பரிமாற்றங்களில் இருந்து பயனாளர்களின் தகவல்களைப் பெற்று பயன்படுத்த ஜெர்மன் ‘தனியுரிமை கண்காணிப்பு அமைப்பு’ தடை விதித்தது. ‘ஜெர்மனியை சேர்ந்த பல லட்சக்கணகான பயனாளிகளின் உரிமைகள் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என ஹம்பர்கின் தரவு பாதுகாப்பு ஆணையர் ஜோகன்னஸ் காஸ்பர் தெரிவித்துள்ளார். ‘வாட்ஸப்பின் புதிய கொள்கைகள் முகநூலுடனான தகவல் பரிமாற்ற விரிவாக்கத்துடன் தொடர்புடையது அல்ல. வணிகம் மற்றும் வாடிக்கையாளர் இடையிலான தகவல்களுடன் மட்டுமே தொடர்புடையது’ என வாட்ஸப் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.