அசாம், மணிப்பூரில் முன்னேற்றம்

இடதுசாரி பயங்கரவாதங்கள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசு எடுத்துவரும் தீவிர முயற்சிகள் நல்ல பலனை அளிக்கத் துவங்கியுள்ளன. அந்த பிராந்தியங்களில் சமீப காலமாக, கம்யூனிஸ்ட்டு பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம், 1958ன் கீழ் (AFSPA) அசாம் மற்றும் மணிப்பூரில், பட்டியலிடப்பட்டுள்ள தொந்தரவுகள் நிறைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுக்க பகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்துள்ளது. அதே நேரத்தில், இச்சட்டத்தின் கீழ் அருணாச்சல மற்றும் நாகாலாந்தின் சில பகுதிகளின் தொந்தரவு நிறைந்த பகுதி நிலையை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இரண்டு தனித்தனி அறிவிப்புகளில், வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறியது. இச்சட்டத்தின்படி, ஒரு நபரை வாரண்ட் இன்றி கைது செய்வதற்கும், வேறு சில நடவடிக்கைகளுடன் வாரண்ட் இல்லாமல் வளாகத்திற்குள் நுழைய அல்லது தேடுவதற்கும் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.