கர்நாடகாவில் முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய ஹிஜாப் சர்ச்சை ஏற்படுத்தின. பல முஸ்லிம் அறிஞர்கள், ஹிஜாப், புர்கா போன்றவை இஸ்லாத்தில் கட்டாயம் கிடையாது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்தனர். எனினும், பல பழமைவாதிகளும், வன்முறையை தூண்டி மதத்தை வளர்க்க வேண்டும் என்று எண்ணும் பிரிவினைவாதிகளும், சில கட்சியினரும் இவ்விவகாரத்தை கைவிடாமல் பூதாகரமாக்கி வருகின்றனர். அவ்வகையில், ஜமியத் உலேமா இ ஹிந்த் என்ற முக்கிய முஸ்லிம் அமைப்பின் அர்ஷாத் மதனி பிரிவானது, இஸ்லாத்தில் ஹிஜாப் கட்டாயம் என்றும், முஸ்லிம் மாணவிகள் அதை அணிவதைத் தடுப்பது பாரத அரசின் மத சுதந்திரத்தைப் பற்றி பேசும் அரசியலமைப்பின் 25வது பிரிவுக்கு எதிரானது என்றும் கூறி சர்ச்சையை கிளற முனைந்துள்ளது. ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இதுபோன்ற கருத்துகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.